இறால் சில்லி வறுவல்

images (1)

தேவையான பொருட்கள்:

இறால் – 200 கிராம்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தேங்காய் – 1/2 மூடி (துருவியது)

பூண்டு – 4 பற்கள் (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் அனைத்து பொருட்களும் நன்கு வேகுமாறு 5-6 நிமிடம் வதக்கி இறக்கினால், சூப்பரான இறால் சில்லி வறுவல் ரெடி!!!

Leave a Reply