ஆனால், மூளை தூங்குவதில்லை.
மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது. கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது. மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பதுதான் உண்மை. அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.
நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும் திறன் இருக்கிறது. பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம். அவற்றை கனவுகளாக நமக்கு உணரவைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதனால்தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை. மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம், மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நடுப்பகுதி மூளையில் உள்ள டோபமைன் என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்துகொண்டே இருக்கும். இதுதான் நாம் சில செயல்களை செய்யும்போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம்தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்றும் கூறுகிறார்கள். இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.
பெண்கள் மூளையை குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஆணோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள்.
உடலில் எந்த இடத்திலும், சிறு காயம் பட்டால் கூட உடனே வலி தெரியும். ஆனால் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது.
அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.
மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத்திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்சினைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.