கல்லூரி மாணவர்களின் செல்போன் டேடாவை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் படிப்பு, பார்ட்டி மற்றும் பிற பழக்க வழக்கங்களை கண்காணித்து தானாகவே மாணவனின் தர புள்ளியை சராசரியாக கணிக்கும் முதல் ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷனை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மாணவர்களின் படிப்பு, பார்ட்டி, தூக்கம், உடற்பயிற்சி மற்றும் பிற நினைவு மற்றும் நினைவின்றி நடத்தைகளின் நிகழ் நேர கருத்துக்களை வழங்கி, மாணவர்களின் ‘செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கல்விகால வாழ்க்கையின் பாதையை கண்காணிக்க உதவும் புதிய வழிகளை இந்த கண்டுபிடிப்பு வழங்குகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், முந்தைய மாணவர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து இந்த ஸ்மார்ட்ஜிபிஏ அப்ளிக்கேஷனை உருவாக்கினர். இது கல்லூரி மாணவர்களின் மனநிலை, கல்வி செயல்திறன் மற்றும் நடத்தை போக்குகளை தானாகவே வெளிப்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளனர்.
எங்கள் ஸ்மார்ட்ஜிபிஏ-வின் முடிவுகள், கால மற்றும் ஒட்டுமொத்த ஜிபிஏ உடன் கணிசமாக தொடர்புடைய ஸ்மார்ட்போனின் சென்ஸிங் டேட்டாவிலிருந்து தானாகவே ஊகித்து என்னற்ற முக்கியமான ஆய்வு மற்றும் சமூக நடத்தைகளை காண்பிக்கும் என்று ஸ்மார்ட்ஜிபிஏவின் ஆய்வு மூத்த எழுத்தாளரான டார்ட்மவுத் கணினி அறிவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ காம்ப்பெல், கூறியுள்ளார்.
இது மாணவர்களி்ன் வகுப்பு வருகை பதிவு, தூக்கம், உடல் ரீதியான செயல்பாடு மற்றும் கலகலப்பு (நேருக்கு நேர் உரையாடல் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற நகர்வுநிலை(mobility)) என மாணவர்கள் நடத்தை மாற்றங்கள் கண்காணிக்கிறது. இந்த அப்ளிக்கேஷனில் பயணர்களின் உள்ளீடு(input) இல்லாமலும் திரைக்குப் பின்னால் வேலை செய்யும்.