கர்ப்பிணி சர்வருக்கு கடவுள் கொடுத்த $900 டிப்ஸ்
அமெரிக்காவை சேர்ந்த சாரா கிளார்க் என்ற பெண் கர்ப்பமான நிலையில் தொடர்ந்து ஏழ்மை காரணமாக தனது சர்வர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். வரும் ஜனவரியில் அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் பிரசவ செலவுக்காக அவர் வேலை செய்து பணம் சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் வேலை செய்யும் ஓட்டலில் சாப்பிட வந்த ஒருவர் $61.30 டாலருக்கு சாப்பிட்டுவிட்டு $900 டாலர் டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்த தொகையை பார்த்ததும் சாரா கிளார்க் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
டிப்ஸ் கொடுத்த நபர், ‘இது கடவுளின் கொடுத்த பணம். இதை நாங்கள் உங்களிடம் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று அந்த பில்லில் எழுதியுள்ளார்.