தாயின் வயிற்றுக்குள் குதித்து விளையாடிய குழந்தை. அபூர்வ வீடியோ
நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக காத்திருந்த நேரத்தில் எடுத்த செல்பி வீடியோ ஒன்றில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை துள்ளி விளையாடிய காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அந்த குழந்தையை வயிற்றில் சுமந்த தாயே செல்பியாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூப் இணையதளத்தில் பதிவாகியுள்ளது.
பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் வரும் வரை ஒரு அறையில் படுத்திருந்தார். அப்போது திடீரென தனது வயிற்றில் இருக்கும் குழந்தை துள்ளுவதை கண்ட அவர் தன்னுடைய மொபைல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.
வயிற்றை கிழித்துக்கொண்டு குழந்தை வெளியே வந்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு தாயின் வயிற்றில் துள்ளி விளையாடியது இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது மில்லியன்கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர். நமது சென்னை டுடே நியூஸ் இணையதள வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.