ப்ரீத்தி ஜிந்தாவின் பாலியல் புகார் வழக்கில் அர்ஜூன் தெண்டுல்கர். திடுக்கிடும் தகவல்

Preity-witness-Arjun-Tendulkarகடந்த வாரம் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தனது முன்னாள் காதலரும் தொழிலதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இன்று ப்ரீத்தி ஜிந்தா மும்பை காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க உள்ளார். இந்நிலையில் போலீஸார் இந்த சம்பவம் நடந்தபோது அருகில் இருந்தவர்கள் யார் யார் என விசாரித்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 30ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் IX பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்த போட்டியின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அன்றைய தின போட்டியின்போது ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் திரட்டியுள்ளனர்.

இந்த விவரங்களில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் வந்திருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது. ப்ரீத்தி ஜிந்தா – நெஸ்வாடியா பின்னால் உட்கார்ந்திருந்துதான் அர்ஜூன் தெண்டுல்கர் போட்டியை பார்த்து வந்துள்ளார். எனவே அர்ஜூன் தெண்டுல்கரிடமும் விசாரணை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சச்சின் தெண்டுல்கரிடம் போலீஸார் அனுமதி கேட்டுள்ளனர். இந்த தகவல் வெளியே கசிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply