விஞ்ஞானிகள் கண்டுபிடித்த செயற்கை கருப்பை! குறைபிரசவ குழந்தைகளுக்கு பாதுகாப்பு

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த செயற்கை கருப்பை! குறைபிரசவ குழந்தைகளுக்கு பாதுகாப்பு

குறை பிரசவத்தில் பிறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்ய செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

குறிப்பிட்ட காலத்தைவிட ஒரிரு வாரங்களுக்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் இன்குபேட்டர் கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர். அதில் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது.

எனவே தாயின் கருப்பை போன்றே வடிவமைக்கப்பட்ட செயற்கை கர்ப்பபையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், ஜப்பானில் உள்ள தொகோகு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்களும் இணைந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த செயற்கை கருப்பை தாயின் கர்ப்பபை போன்று மிகவும் பாதுகாப்பானது. நோய் தொற்று எதுவும் ஏற்படாது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான பனிக்குட நீர் மற்றும் செயற்கை நச்சுக்கொடி போன்றவையும் உள்ளன.

அதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply