ஜூலையில் ஜனாதிபதி தேர்தல். அதிமுகவின் முடிவு என்ன?
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலின் முடிவை தீர்மானிக்கின்ற சக்தியாக அதிமுக, பிஜு ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகள் உள்ளது.
கடந்த முறை பிரணாப் முகர்ஜிக்கு எதிராக பி.ஏ.சங்மாவை மறைந்த முதல்வர் ஜெயலலிதா களமிறக்கினார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் நிலை குறித்து சசிகலா முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறவிருக்கும் மதிய உணவு விருந்தில் பங்கேற்குமாறு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் ஒடிசா முதல்வருக்கு ஜனாதிபதி மதிய உணவு விருந்துக்கு அழைப்பு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.