ஜனாதிபதியின் காஞ்சிபுரம் பயணம் திடீர் ரத்து ஏன்?

ஜனாதிபதியின் காஞ்சிபுரம் பயணம் திடீர் ரத்து ஏன்?

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை மறுநாள் காஞ்சிபுரத்திற்கு வருகை வந்து வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு பின்னர் காஞ்சி சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென இந்த பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் ரத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம் பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அதற்கு பதிலாக ஜனாதிபதி ஊட்டி செல்லவுள்ளதாகவும், அங்குள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் அவர் பங்கேற்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.20 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்கிறார்.

பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி சென்று பள்ளி விழாவில் பங்கேற்கிறார். அவருடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் பலர் பங்கேற்கிறார்

ஆண்டு விழா முடிந்ததும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்கிறார். மறுநாள்(புதன் கிழமை) காலை ஊட்டி தாவரவியல் பூங்கா சென்று பார்வையிடுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பும் அவர் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

Leave a Reply