டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார். நேற்று மாலை 3 மணிமுதல் பிரணாப் முகர்ஜி டுவிட்டரில் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், சிலமணி நேரங்களில் 16000 ஃபாலோயர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஃபேஸ்புக், டுவிட்டரில் தினசர் தனது நிகழ்ச்சிகளை பதிவு செய்து வருவதுபோல் ஜனாதிபதி டுவிட்டரில் நேற்று முதல் இணைந்துள்ளார். நேற்று முதல் @RashtrapatiBhvn என்ற பெயரில் கணக்கு தொடங்கினார். வழக்கமான மேம்படுத்தலுக்கு எங்களை பின்பற்றவும்’ என்று முதல் தகவலை அனுப்பியிருக்கிறார். கணக்கு தொடங்கிய சில மணி நேரத்தில் 16 ஆயிரம் பேர் வரை அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 10 மணி நிலவரப்படி அவரை 29,500 பேர் வரை தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இந்தியாவில் முதன்முறையாக டுவிட்டரில் இணைந்த ஜனாதிபதி என்ற பெயரை பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார். இதேபோல், பேஸ்புக்கிலும் இணைந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார்.