அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி. பிரணாப் முகர்ஜி அதிரடி உத்தரவு

அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி. பிரணாப் முகர்ஜி அதிரடி உத்தரவு
arunchal pradesh
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜி இன்று  கையெழுத்திட்டார்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அங்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 21  பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். இதனால் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற உறுப்பினர்களும், பாஜக உறுப்பினர்களும் பேரவைக்கு வெளியே தனிக் கூட்டம் நடத்தி, முதல்வர் நபம் துகியை அதிரடியாக நீக்கி அவருக்கு பதிலாக காங்கிரஸிருந்து பிரிந்து சென்ற கலிகோ புல் என்பவரை முதல்வராக தேர்வு செய்தனர். ஆனால் இதற்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்நிலையில்  அருணாசல பிரதேசம் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கொறடா பமாங் பெலிக்ஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அருணாசல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply