ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி பயணம். புதிய ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

4இந்திய பிரதமராக பொறுப்பேற்றவுடன் நரேந்திரமோடி முதல்முறையாக இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இன்று காலை ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை மாநில ஆளுனர் என்.என்.வோரா, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்

ஜம்முவில் இன்று கத்ரா – உதம்பூர் இடையே ரயில்போக்குவரத்தை அவர் துவங்கி வைத்தார். இந்த விழாவில் பிரதமர் பேசியதாவது:

“ரூ.1,150 கோடி செலவில் இந்த ரயில் சேவை உருவாகி உள்ளது. இதன்மூலம் சாமான்ய மக்களும் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.

ஜம்மு – கத்ரா ரயில் சேவைக்கு ஸ்ரீசக்தி எக்ஸ்பிரஸ் என பெயரிடலாம். ஜம்மு – காஷ்மீரில் மேலும் பல புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரயில்வே துறையில் சூரியஒளி மின்சக்தி அதிக அளவில் பயன்படுத்தப்படும்.

ஜம்மு வளர்ச்சி ஒருபோதும், எவ்வகையிலும் பாதிக்கப்படாது. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தவர் ஒவ்வொருவர் மனதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

இம்மாநிலம் ஏற்கெனவே நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டது. இனி இங்கு வளர்ச்சியும், அமைதியும் நிலைத்திட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/VoQ19C” standard=”http://www.youtube.com/v/jwaKt3VjtKg?fs=1″ vars=”ytid=jwaKt3VjtKg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4235″ /]

Leave a Reply