டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனும் மொபைல் அப்ளிகேஷனினை வெளியிட்டார். இந்த செயலி மூலம் முக்கிய அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான இந்த செயலி கூகுளின் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதோடு மக்கள் நேரடியாக பிரதமருடன் உரையாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்த மோடி “Launched ‘Narendra Modi’. Come, let’s stay connected on the mobile! குறிப்பிட்டிருந்தார்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்வது, மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களை நேரடியாக பிரதமரிடம் இருந்து பெற முடியும்.