இஸ்ரேலை அடுத்து ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இன்று ஜி-20 மாநாடு துவங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை துவங்கி வைக்கிறார்.
இந்நிலையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி சென்றார். ஹம்பர்க் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனில் உள்ள19 நாட்டு தலைவர்களை சந்திக்கிறார்.
அவர்களுடன் பயங்கரவாதம் உட்பட முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.