பாரத பிரதமராக பதவியேற்ற பின்னர் நரேந்திர மோடி முதல்முறையாக 5 நாட்கள் அரசு முறைப் பயணமாக நாளை ஜப்பான் செல்ல இருக்கின்றார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் போது இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த, புதிய ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமர்களால் கையெழுத்தாகும் என தெரிகிறது.
பிரதமர் மோடி முதலில் நாளை ஜப்பானில் உள்ள க்யோட்டோ என்ற நகருக்கு சென்று நாளைய இரவு அங்கு தங்கிய பின்னர், நாளை மறுநாள் காலை தலைநகர் டோக்கியோவுக்கு செல்ல இருப்பதாக அவரது பயணத்திட்டம் தெரிவிக்கின்றது.
இந்த பயணம் குறித்து ஜப்பான் மொழியில் நேற்று டுவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர் மோடி, “இந்த பயணத்தால் இரு நாட்டு உறவில் ஒரு புதிய நிலை உருவாகும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.