ஐரோப்பா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான லுசாம்பெர்க் நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 42 வயது சேவியர் பேட்டல் என்பவர் பிரதமராக இருந்து வருகிறார். இவரது அமைச்சரவையில் எட்டினே செனேடர் என்பவர் துணை பிரதமராக இருக்கின்றார். இந்த நாட்டில் உள்ள ஒருசில பத்திரிகைகள், பிரதமரும், துணை பிரதமரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
முதலில் இந்த செய்தியை மறுத்த இருவரும் அதன்பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் பிரதமரும், துணை பிரதமரும் நாளை மறுநாள் ஓரினசேர்க்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த தகவலை பிரதமர் சேவியர் பேட்டல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததோடு துணை பிரதமர் எட்டினே மீது தான் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகவும், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் பெரிது படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.