கொரோனா வைரசால் 15,000 கோடி இழப்பை சந்திக்கும் பிரிண்ட் மீடியாக்கள்

அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பிரிண்ட் மீடியாக்கள் தற்போது சரியாக விற்பனை இல்லை. ஒருசில பிரிண்ட் மீடியாக்கள் மட்டுமே தற்போது செய்தித்தாள்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த செய்தித்தாள்களும் பெரும்பாலும் விற்பனையாகாமல் திரும்பி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் செய்தித்தாள்களை வாங்கிப் படிப்பது இல்லை. தினசரி வீட்டிற்கு சென்று போடும் செய்தித்தாள்களும் கூட தற்போது சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் நாடு முழுவதும் செய்தித்தாள் விற்பனை குறைந்துள்ளதால் செய்தித்தாள்கள் பிரிண்ட் அடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு அரசு நிவாரண உதவி செய்ய வேண்டுமென்றும் பிரிண்ட் மீடியாக்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply