மொபைல் போனை விழுங்கிய அயர்லாந்து சிறைக்கைதிக்கு ஆபரேஷன்
அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரின் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் சிறியரக மொபைல் போன் ஒன்றை விழுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மொபைல் போனை விழுங்கிய 6 மணிநேரம் கழித்தே அங்கிருந்த ஊழியர்களிடம் தான் மொபைல்போனை விழுங்கியதை கூறியுள்ளார்.
மொபைல்போனை விழுங்கிய காரணத்தால், அந்நபருக்கு தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அயர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
எண்டோஸ்கோப் மூலம் ஒரு நீண்ட மெல்லிய நெகிழ்வான குழாயின் வழியாக ஒளியைப் பாய்ச்சி வீடியோ கேமராவின் வழியாக பார்த்தபோது, உணவுக்குழாயின் இடையில் அவர் விழுங்கிய செல்போன் சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். பின்னர் வயிற்றின் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை செய்து, அந்த செல்போனை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். சுமார் ஒருவார மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் அவன் சிறைச்சாலைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டதாக சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி கையேடு (International Journal of Surgery Case Reports) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முடிந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த கைதி தற்போது நலமாக இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=rTD33NPaxDQ