நார்வே: உல்லாச வாழ்க்கை வாழும் சிறைக்கைதிகள்

நார்வே: உல்லாச வாழ்க்கை வாழும் சிறைக்கைதிகள்

ஒரு காலத்தில் கொடூரமான சிறைசாலை என கருதப்பட்டு, மூடப்பட்ட சிறைசாலை. தற்போது உலகின் உல்லாச சிறையாக மாறியுள்ளது.

மிகவும் கொடூரமான சிறைச்சாலையாக கருதப்படும் இந்த சிறைச்சாலையில், பாலியல் வன்கொடுமை குற்ற வழக்கில் சிக்கியவர்கள் இங்கு தான் தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள். இதை எதிர்த்து கடந்த 1915ல் ஆண்கள் சிறைசாலை கொடுமைகளை எதிர்த்து கிளர்ச்சி உண்டாக்கினர். தவிர, அவர்கள் அங்கிருந்து தப்பிக்கவும் முயற்சித்தனர்.

இதனால் நிலையை கட்டுக்குள் கொண்டுவர இந்த தீவிற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. பின் கடந்த 1953ல் இந்த சிறை முழுமையாக மூடப்பட்டது. பின் 1970ல் அரசே இந்த இடத்தை கையகப்படுத்தி கொண்டது.
பின் 115 கைதிகள் இருக்கும்படி இந்த சிறை மீண்டும் கடந்த 1982ல் புதிதாக்கப்பட்டது. இந்த சிறைக்கென நிறைய தனித்தன்மைகல் உள்ளது. டி-வி, சமையலறை, படுக்கையறை என பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.

இங்கே அடைப்பட்டு இருக்கும் கைதிகள் பொழுதை கழிக்க, குதிரை சவாரி, மீன் பிடித்தல், டென்னிஸ், ரன்னிங், நீச்சல், உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சிறையை பாதுகாக்க ஐந்தே பாதுகாவலர்கள் மட்டுமே உள்ளனர். குறிப்பாக கைதிகளுக்கு யூனி-பார்ம் கிடையாது. மேலும் இந்த சிறையை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. அவர்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம்.

இங்கு இத்தனை சலுகைகள் கொடுத்தும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அங்கு உள்ளனர். கடந்த 33 ஆண்டுகளில் இந்த சிறையில் இருந்து இதுவரை ஒரே ஒரு முறை தான் கைதி தப்பிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply