முஸ்லீம்களுக்கு தனி வங்கியா? ரிசர்வ் வங்கி ஆலோசனை
முஸ்லீம் மதத்தின்படி வட்டி விதிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான முஸ்லீம்கள் வங்கியில் கணக்கு வைப்பதோ அல்லது வங்கி பரிவர்த்தனை செய்வதோ இல்லை. இதனால் முஸ்லீம்களையும் வங்கிக்கு வரவழைக்க முஸ்லீம் வங்கிகள் தொடங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருகிறது.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முஸ்லீம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லீம் வங்கிகளை ஏற்படுத்த உண்டான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் முஸ்லீம் வங்கிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ‘`பல்வேறு விதிகள் மற்றும் சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது. மேலும் இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. முஸ்லீம் வங்கிகள் இந்தியாவில் படிப்படியாக கொண்டுவரப்படும். முதலில் தற்போதுள்ள வங்கிகளில் முஸ்லீம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்களைக் கொண்டு வரப்படும். முழுவதும் முஸ்லீம் வங்கிகளைக் கொண்டு வருவது தற்போது உள்ள சூழ்நிலையில் மிக சிக்கலானது’’ என்று பதில் கூறப்பட்டுள்ளது.