பெரும் பரபரப்பு
10ஆம் வகுப்பில் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதற்காக 50,000 வரை லஞ்சம் வாங்குவதாக தனியார் பள்ளிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் 10ஆம் வகுப்பில் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 10ஆம் வகுப்பில் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த மதிப்பெண்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்வார் என்று கூறப்பட்டது இதனை அடுத்து ஒரு சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு அதிகமாக மதிப்பெண் வழங்க ரூபாய் 50,000 வரை லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது திடுக்கிட வைத்துள்ளது
இதுகுறித்து பெற்றோர்கள் பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது