பிரியங்கா தலைமையில் உ.பி. தேர்தல். ராகுல் காந்தியின் தோல்வியை உறுதிப்படுத்துகிறதா?
உத்தரபிரதேசத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை ராகுல் காந்தி முன்னெடுத்து காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினார். ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் 355 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. சமாஜ்வாடி கட்சி இந்த தேர்தலில் 224 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ராகுல் காந்தியின் தலைமையில் பெரும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் அவரை தலைமை தாங்க விரும்பவில்லை. எனவே இந்த தேர்தலில் பிரியங்கா காந்தியை களமிறக்கியுள்ளது. பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அவர்தான் முதல்வர் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா ‘உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா களமிறக்கப்படுவது காங்கிரஸின் வாரிசு அரசியலை தோலுரித்து காட்டுகிறது. மேலும் அரசியலில் ராகுல் காந்தி தோல்வியடைந்துவிட்டார் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்