உ.பி.யில் காங்கிரஸ் வேட்பாளர் ப்ரியங்கா காந்தியா? பரபரப்பு தகவல்

உ.பி.யில் காங்கிரஸ் வேட்பாளர் ப்ரியங்கா காந்தியா? பரபரப்பு தகவல்

priyankaகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அமேதி தொகுதியில் உள்ள உள்ள கொஹ்ரா என்ற கிராமத்தில் மக்களுடன் மக்களாக இருந்து கலந்துரையாடிய ராகுல்காந்தி, ப்ரியங்கா காந்தி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அரசியலுக்கு வருமாறு ப்ரியங்காவை நான் பலமுறை கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த கோரிக்கையை நான் கூறுவதைவிட மக்களாகிய நீங்கள் அவரிடம் பேசினால் அவரை சம்மதிக்க வைக்க முடியும்.

இந்நிலையில் விரைவில் உ.பி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் ப்ரியங்காவை உ.பி.மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. உ.பியில் காங்கிரஸ் தற்போது நான்காவது இடத்தில் பரிதாபமாக உள்ள நிலையில் ப்ரியங்காவால் மட்டுமே காங்கிரஸை கரை சேர்க்க முடியும் என ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

ஆனாலும் ஒருசிலர், ப்ரியங்கா பிரதமர் பதவிக்கு தகுதியானவர், அவரை உ.பி என்ற ஒரு மாநிலத்திற்குள் முடக்கிவிட வேண்டாம் என்று கருத்து கூறியுள்ளனர். முதலமைச்சராகவே அல்லது பிரதமர் வேட்பாளராகவோ, விரைவில் ப்ரியங்கா அரசியலில் குதிப்பார் என்றும், இந்திரா காந்திக்கு பின்னர் மக்களை கவரும் திறமை அவரிடம் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply