நேற்று பாராளுமன்றம் நடந்தபோது பார்வையாளர்களின் வரிசையில் தனது நண்பர்களுடன் வந்திருந்தார் பிரியங்கா காந்தி – வதேராவின் மகன் ரைஹன். அவர் நாள்முழுவதும் பொறுமையாக உட்கார்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை கவனித்ததாக கூறப்படுகிறது.
நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பிரியங்கா காந்தியை அடுத்து ஐந்தாவது தலைமுறையாக காங்கிரஸ் கட்சிக்கு நாளைய தலைவர் ஒருவர் உருவாகி வருவதாக காங்கிரஸ் கட்சியினரே கமெண்ட் அடித்தனர்.
நாடாளுமன்றத்தில் ரைஹான் வந்திருந்தபோது அவருடைய பாட்டி சோனியா காந்தி அவையில் பேசிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரைஹான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவருடைய தாய்மாமா ராகுல்காந்தி அவைக்கு வராதது ஏமாற்றமாக இருந்ததாக கூறப்படுகிறது.
13 வயதாகும் ரைஹான் அவரது பள்ளியில் நடக்கவுள்ள ஒரு புராஜக்ட் குறித்து குறிப்புகள் எடுப்பதற்காக லோக்சபாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. சபை முடிந்தது நாடாளுமன்றம் முழுவதையும் அவர் தனது நண்பர்களுடன் சுற்றிப்பார்த்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பினார்.