உ.பி. முதல்வர் வேட்பாளர் யார்? பிரியங்கா-ஷீலா தீட்சித். மணிஷ் திவாரி தகவல்
2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் பொறுப்பாளராக பிரியங்காவை கட்சி மேலிடம் நியமிக்க இருப்பதாகவும், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரியங்கா பிரசாரம் செய்து வந்த நிலையில் தற்போது உள்ளசூழ்நிலையை சமாளிக்க பிரியங்காவால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் அவர் பிரசாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் உ.பி. மாநில முதல்வர் பதவி வேட்பாளராக, காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித்தை கட்சி மேலிடம் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கருத்து கூறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி ஊடகங்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கற்பனையாக எதையும் எழுதக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மணீஷ் திவாரி மேலும் கூறியதாவது, “உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் பங்கு குறித்து தெரிந்துகொள்வதற்கு ஊடகங்கள் பொறுமை காக்க வேண்டும். தக்க நேரத்தில் இதுகுறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.