இந்த காரை ஓட்ட வேண்டும் என்றால் விமான பைலட் லைசென்சும் வேண்டுமாம்
ஸ்காடால்ந்து நாட்டை சேர்ந்த ஒரு பிரபல கார் நிறுவனம், பறக்கும் கார் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் தோன்றும் கார் போல் சாலையிலும், ஆகாயத்திலும் இந்த கார் செல்லும்.
பறக்கும் கார்களைத் தயாரிக்க உலகின் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில், அந்த முயற்சியில் முதன்முதலில் நெதர்லாந்தைச் சேர்ந்த பிஏஎல்-வி (PAL-V) என்ற நிறுவனம் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.
நெதர்லாந்தின் ராம்ஸ்டான்க்ஸ்வீர் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் அந்த நிறுவனம் 2018ல் தனது முதல் பறக்கும் காரை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த காரை வாங்க விரும்பும் நபர்கள், கார் ஓட்டுனர் உரிமம் மற்றும் விமான ஓட்டுனர் உரிமத்தை சமர்பிக்க வேண்டுமாம்.