இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் மற்றும் அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, தூத்துக்குடி, திண்டிவனம், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 001/REC/CC-FR/2015
தேதி: 20.03.2015
பணி: Associate Professor
காலியிடங்கள்: 178
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 36
2. Mechanical Engineering – 38
3. Electronics – Communication Engineering – 19
4. Electronics – Communication Engineering – 14
5. Computer Science Engineering / Information Technology -25
6. Automobile Engineering – 01
7. Aeronautical Engineering – 01
8. Instrumentation Engineering – 01
9. Nano Science – Technology – 02
10. Petrochemical Technology – 01
11. Mathematics – 11
12. Physics:11, Chemistry – 13
13. Computer Application – 05
சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + AGP ரூ.9,000
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அதே பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Professor (Engineering/Technology) (Science & Humanities)
காலியிடங்கள்: 102
துறைவாரியான காலியிடங்கள்: விவரம்:
1. Civil Engineering – 14
2. Mechanical Engineering – 21
3. Electronics – Communication Engineering – 21
4. Electrical – Electronics Engineering – 14
5. Computer Science Engineering / Information Technology – 20
6. Automobile Engineering – 01
7. Aeronautical Engineering – 01
8. Instrumentation Engineering – 01
9. Nano Science – Technology – 02
10. Management Studies – 03
11. Computer Applications – 04
சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000 + AGP ரூ.9,000
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அதே பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஆசிரியர் அல்லது ஆராய்ச்சியாளராக பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400. இதனை The Registrar, Anna University, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற அண்ணாபல்கலைக் கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வடிவ விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து The Registrar, Anna University, Chennai – 600025 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Anna University, Chennai – 600025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.