ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தில் வரும் பேராசிரியர் கேரக்டருக்கு மூலகாரணமாகைருந்த திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை ஆசிரியர் ஜான் குமார், கடந்த 1ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவரது ஓய்வை மாணவர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களுக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேராசிரிய ஜான் குமார் அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை வைத்து உருவாக்கியதுதான் ரமணா கேரக்டர் என்று ஏற்கனவே ஒரு கல்லூரி விழாவில் இயக்குனர் முருகதாஸ் கூறியிருக்கிறார்.
பாடம் படிக்க வந்த மாணவர்களிடம் பாடத் திட்டத்தையும் தாண்டி சமூக அக்கறையை இதமாகச் சொல்லி கொடுத்து நல்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என இவருடைய முன்னாள் மாணவர்கள் இவருக்கு புகழாரம் சூட்டுகிகின்றனர்.
சுங்கத்துறை அலுவலராக பணிபுரியும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி திலீபன், தமிழ்நாடு பார் கவுன்சில் முன்னாள் தலைவர் சந்திரமோகன், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய பல நேர்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் பலர் இவருடைய மாணவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமும் படித்த ஜான்குமார்“பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அநீதிக்கு எதிராக தனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடதுவதற்கு ஓய்வே கிடையாது என்றும் ஓய்வு நாளில் இவர் கூறியுள்ளார்.