அதிமுகவுக்கு நடிகை குஷ்பு திடீர் ஆதரவு. பெரும் பரபரப்பு

அதிமுகவுக்கு நடிகை குஷ்பு திடீர் ஆதரவு. பெரும் பரபரப்பு

kushbooதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக, தேமுதிக, பாஜக, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக மற்றும் திமுக ஆகிய முன்னணி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனித சங்கிலி, கடையடைப்பு போராட்டம், ஆகியவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் பிரபல நடிகையுமான குஷ்பு, ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் சொல்கிற கட்சி காங்கிரஸ் கிடையாது என்றும் எதை செய்தாலும் யோசித்து செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி தனி மதுக்கொள்கை வகுக்கப்படும் என சொல்கிறார் என்றால், அந்த திட்டத்துக்கு அவர்தான் பதில் சொல்லணும். ஆனால் மற்ற கட்சிகளை மாதிரி, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று சொல்வது சாத்தியமில்லை. அது அவர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.

தமிழகத்தில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆதரவு கொடுக்கிறார் என்றால் அவர் ராகுல்காந்தியிடம் பேசியிருப்பார். அவர் டெல்லி சென்றிருந்தார். அப்போது, இதுபோன்ற பிரச்னைக்கு ஆதரவு கொடுக்கலாமா, வேண்டாமா என கேட்டிருப்பார். அதன்பிறகு அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. இது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். இல்லையென்றால், இந்தியா முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என அதிமுக மட்டுமே வலியுறுத்தி வரும் நிலையில், அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போன்ற ஒரு கருத்தை குஷ்பூ கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply