இஷ்டப்பட்டு விபச்சாரம் செய்தால் தவறு இல்லை. குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஷ்டப்பட்டு விபச்சாரம் செய்தால் தவறு இல்லை. குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஒரு பெண் விபச்சாரம் செய்யும்படி மற்றவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டா மட்டுமே தவறு என்றும், அவரே இஷ்டப்பட்டு விபச்சாரம் செய்தால் அதில் எந்த தவறும் இல்லை என்றும் குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் செயல்படும் விபசார விடுதியில் கடந்த ஜனவரி மாதம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த பாலியல் தொழிலாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

இதில், வினோத் படேல் என்ற கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர் பாலியல் தொழிலாளியின் விருப்பப்படியே, தான் அங்கு சென்றதாகவும், இதனை குற்றம் எனக் கூறி, போலீசார் 370 தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் எப்படி கைது செய்ய முடியும் எனவும் கேட்டு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, பாலியல் தொழிலில் ஒருவர் விருப்பப்பட்டு ஈடுபடும்போது அதனை குற்றம் எனச் சொல்ல முடியாது என்று கூறியதோடு, கைது செய்யப்பட்ட வினோத் படேலை உடனே விடுவிக்கும்படியும் உத்தரவிட்டனர்.

கட்டாயத்தின்பேரில், யாரேனும் ஒருவரை மிரட்டி பாலியல் தொழில் செய்ய வைத்தால் மட்டுமே அது தவறு என்றாகிவிடும். விருப்பத்தின்பேரில், தெரிந்தே அந்த தொழிலை செய்வதால், அவரை தண்டிக்க முடியாது என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply