மதுகுடித்தல், புகைப்பது, தேயிலை பொருள்களை அடிக்கடி பயன்படுத்துவது ஆகியவை, பற்கள் தொடர்புடைய பல்வேறு வகையான நோய்களுக்கு காரணமாக உள்ளன. ஈறுகள் மற்றும் பற்களில் உண்டாகும் பாக்டீரியா தொற்றால் நீரிழிவு, இன்பெக்டோ எண்டோ கார்டைஸ், மாரடைப்பு, பக்கவாதம், நிமோனியா, எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருகின்றன. பிளாக் எனப்படும் பற்படிமானத்தில் வளரும் பாக்டீரியா பற்குழிகளில் சத்துக்குறைபாட்டை உருவாக்குகிறது.
உடனே சிகிச்சை பெறாவிட்டால் சுற்றியுள்ள எலும்புகளை பாதிக்கிறது. ஆண்டுக்கு இருமுறை குறைந்தபட்சம் பற்களை மருத்துவரிடம் காண்பித்து சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இருமுறை பல் துலக்குதலும், ஒவ்வொரு முறை உணவுக்கு பின்பும் வாய் கொப்பளித்தலும் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமாகும். நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்தல், (மவுத் புல்லிங்) தாடை எலும்புக்கும், பற்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்கிறது. எனவே, பற்களை நன்றாக வைத்துக் கொண்டால் உடலும் நன்றாக இருக்கும்.