கமல்ஹாசனின் உத்தம வில்லன் படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் நான்கே நான்கு நாட்களில் படப்பிடிப்பை பெங்களூரில் முடித்துவிட்டு உத்தம வில்லன் குழு சென்னைக்கு வந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றியதற்கு முக்கிய காரணம் பெங்களூரில் உள்ள கர்நாடக தயாரிப்பாளர்களின் சங்கம் உத்தம வில்லனுக்கு எதிராக நடத்திய போராட்டம்தான் காரணமாம். உத்தம் வில்லன் படப்பிடிப்பு குழுவில் முழுக்க முழுக்க தமிழக டெக்னீஷியன்கள் இருந்ததால், படப்பிடிப்பை நடத்த விடாமல் உத்தம வில்லன் படக்குழுவினர்களுக்கு எதிராக போராட்டம் செய்தனர். கமல்ஹாசன் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. கமல்ஹாசனை மரியாதைக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
எனவேதான் பெங்களூர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக உத்தமவில்லன் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர். ஆனால் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்றும் உண்மையில் பெங்களூரில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்றும் இரண்டாவது கட்ட படிப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.