ரயில்கட்டண உயர்வை கண்டித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம். 200 பேர் கைது

train rack chennai

மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியிருந்த ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி சென்னை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
  train rack chennai 1
சென்னை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் இன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 200 பேர்கள் கலந்து கொண்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்னர் முன் அனுமதியின்றி திடீரென போராட்டம் நடத்தினர். ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும் என கோஷமிட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
train rack chennai 2(1)
தகவல் அறிந்ததும் உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பதட்டத்தை தணித்தனர். இந்த போராட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லவேண்டிய சில ரயில்கள் தாமதமாக கிளம்பின
 

Leave a Reply