ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து PSLV C24 செயற்கைக்கோள் இன்று மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெற்றிகரமாக இந்த விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது.
இதற்கான 58½ மணிநேர ‘கவுண்ட்டவுன்’ கடந்த 2 ஆம் தேதி காலை 6.44 மணிக்கு தொடங்கியது.கடல்வழி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவே இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.
புயல், போன்ற இயற்கை அழிவுகள் காலத்தில் கடல் பயணம் மேற்கொள்ள இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைகோள் மூலம் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.