பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஏன். இஸ்ரோ விளக்கம்
பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி ஏன். இஸ்ரோ விளக்கம்
இன்று இரவு ஏழு மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டபோதிலும், செயற்கை கோளூக்கு பாதுகாப்பாக இருக்கும் வெப்ப தடுப்பு சரியாக பிரியவில்லை.
இதனால் விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கை கோள் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விளக்கம் அளித்துள்ளார்
இந்த செயற்கைகோளை திட்டமிட்ட படி 19- நிமிடத்தில் நிலை நிறுத்த முடியவில்லை என்பதால் தோல்வி அடைந்ததாகவும், ராக்கெட்டின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்டதாகவும், 4-வது நிலையில் வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியவில்லை என்றும் கிரண்குமார் மேலும் கூறினார்.