விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11:56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்எல்வி ராக்கெட் கவுண்ட்டவுன் கடந்த 25 மணி நேரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் இன்று காலை 11:56 மணிக்கு சரியாக விண்ணில் பாய்ந்தது
இந்த ராக்கெட் 960 கிலோ எடைகொண்டது என்றும், புவி மற்றும் சுற்றுச் சூழலை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.,