சொரியாசிஸ் மற்றும் பொடுகு சருமநோய்

images (1)

சொரியாசிஸ் இது ஒரு சருமநோய். இந்தநோய் வம்சா வழியாக வரும் வாய்ப்பு அதிகம். தலையில் உள்ள பொடுகு அத்துடன்  நின்று விடுவதில்லை. சிலர் பொடுகுதானே எனக்கருதிக் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது  வழக்கம். இது கூடாது. பொடுகுக்கும் சொரியாசிசுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பொடுகு தலை அடி சருமத்தை பாதிக்காது.  அதனுடைய துகள்கள் மிகவும் சன்னமாகவும், தூசி போலவும் இருக்கும்.

இதற்கு மாறாக சொரியாஸிஸ் ஏற்பட்டால் தலைமுடியில் உள்ள அடிச்சருமம் பாதிப்படையும், சருமம் தடிப்பாகவும், ரோஸ்  நிறத்திலும் இருக்கும். இதில் வரும் துகள்கள் பருமனாகவும், மெழுகிலிருந்து உருகி வருவதை உரித்தாற்போல் காணப்படும். பொடுகுக்கு உரிய ஷாம்பூவோ அல்லது மருந்தையோ உபயோகித்தால் அது குணமாகிவிடும். ஆனால் சோரியாசிசை ஸ்டீராய்டு  கொண்ட திரவங்கள் மற்றும் Salicylix அமிலம் கொண்ட ஷாம் பூக்களால் மட்டுமே குறைக்க இயலும்.

நடுத்தர வயதினருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் பிருஷ்டம் ஆகிய இடங்களில் தோல் பகுதியில் சொரியாசிஸ் ஏற்பட  வாய்ப்பு உண்டு. இந்த இடத்தில் தோல் தடிப்பாகி பெரிய துகள்களாகி உதிரும். இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும்  மாத்திரைகள் மற்றும் வலியைக் குறைக்க பயன்படுத்தும் மாத்திரைகள் சொரியாசிசை அதிகப்படுத்தும்.

குணப்படுத்தும் முறை:

உடம்பிற்கு ஸ்டீராய்டு ஆயின்மென்ட் உபயோகப்படுத்தலாம். இது வீரியம் குறைந்ததாக இருக்கவேண்டும். Liquid Paraffin  மற்றும் மீன் எண்ணைகளை உபயோகித்து சருமத்தை வழவழ என வைத்துக்கொள்ளலாம். இதைத்தடுப்பதற்கு என்றே உள்ள  மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply