பேச்சுவார்த்தையில் உடன்பாடு. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்.

bank strike 300நாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தத்தை  வாபஸ் பெற்றுள்ளனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் பிரநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்படி வங்கி ஊழியர்களுக்கு15 சதவீதம் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.  இந்த 15 சதவீத ஊதிய உயர்வை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Leave a Reply