மனநலம் குறித்த பட்டயப் படிப்பு அறிமுகம்
மனநல பாதுகாப்பு, ஆலோசனைக் கல்வி குறித்த பட்டயப் படிப்பை “ஸ்கார்ஃப்’ அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் இந்தப் படிப்பில் சேரலாம். மன நல மருத்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனம், மனச்சிதைவு ஆய்வு மையமான “ஸ்கார்ஃப்’ அமைப்பின் சார்பில் இந்த ஓராண்டு பட்டயச் சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்க உள்ளன.
இதில் மனநல நோயாளிகள், அவர்களது குடும்பத்தினருக்கான ஆலோசனை நெறிமுறைகள், மன நல ஆலோசனை உதவிகள் உள்ளிட்டவை குறித்து கற்றுக் கொடுக்கப்படும்.
படிப்பின் ஒரு அம்சமாக சமுதாயக் குழுக்கள் மத்தியில் பணியாற்ற பயிற்சி அளிக்கப்படும். உளவியல், சமூகப்பணி, செவிலியர் மற்றும் இதர மருத்துவப் பணிகளில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் அல்லது படித்துக் கொண்டிருப்பவர்கள், மருத்துவர்கள், மனநல நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் குடும்ப உறுப்பினர்களும் இதில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு: www.scarfedu.org.