புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு ஆதரவு அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ ஜெயலலிதாவுடன் சந்திப்பு

புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு ஆதரவு அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ ஜெயலலிதாவுடன் சந்திப்பு

pudhucherryதமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரியிலும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் திடீரென அதிமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் நிரவி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் நேற்று திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று சிவகுமார் கூறியிருப்பினும் அவர் விரைவில் அதிமுகவுக்கு தாவுவார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்.எல்.ஏ சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியபோது “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக முதல்வரின் முடிவுக்கு கட்டுப்படுவேன். எனது 80 சதவீத ஆதரவாளர்கள், நான் சுயேட்சையாக இருப்பதை விட அதிமுகவில் சேருவதையே விரும்பினர். எனது எதிர்கால நடவடிக்கைகளை அம்மாதான் முடிவு செய்வார். தற்போது சுயேட்சை எம்.எல்.ஏ.வாகதான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரி ஆளும்கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல்வரை சந்திக்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக ஆளும்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்.எல்.ஏ தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply