நடிகர் விஜய்யை நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என கூறப்படுகிறது.
விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் இதுகுறித்து கூறியபோது விஜய் புதுவை அரசியலில் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காகவே புதுவை முதல்வரை விஜய் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டால்லும் ஆச்சரியப்படுவதற்கில்லை என விஜய் வட்டாரங்கள் கூறுகின்றன.