சோனியாகாந்தி சிமெண்ட்: புதுவ அரசின் அதிரடி அறிவிப்பு

சோனியாகாந்தி சிமெண்ட்: புதுவ அரசின் அதிரடி அறிவிப்பு

புதுவையில் முதல்வர்-கவர்னர் மோதல் முற்றியுள்ள நிலையில் தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின்போது பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, ’காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரில் புதுச்சேரியில் தரமான சிமென்ட் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

இந்த சிமெண்ட் இன்னும் ஒரு மாதத்துக்குள் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுமட்டுமன்றி புதுச்சேரியில் தொழிற்சாலைகளின் சுகாதாரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனிடையே சட்டப்பேரவை நிகழ்வின்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். புதுச்சேரி அரசு சிறப்பாகச் செயல்படாததால்தான் துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடி தலையிடுகிறார் என்று தனவேல் தெரிவித்தார். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Reply