முதல்வரின் காரில் தலைகீழாக பறந்த தேசியகொடி: டிரைவர் சஸ்பெண்ட்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை அடுத்து முதல்வரின் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை புதுச்சேரி முதல்வரின் தனிச்செயலாளர் உறுதி செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. நாராயணசாமி ஆட்சியை கலைக்க, கிரண் பேடி பல விதத்திலும் முயற்சிப்பதாகவும், கவ்ர்னரை புதுவையில் இருந்து விரட்ட நாராயணசாமி முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமியின் காரில் இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பொருத்தப்பட்டிருப்பதாக, சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக இருந்து வந்த நிலையில் முதல்வரின் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் முதல்வரின் டிரைவர் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் நியாயமாக முதல்வரைத்தான் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களி வலியுறுத்தி வருகின்றனர்