விஜய் படத்தால் அமெரிக்க நிறுவனம் பெற்ற கூடுதல் சிறப்பு

விஜய் படத்தால் அமெரிக்க நிறுவனம் பெற்ற கூடுதல் சிறப்பு
Puli-Movie-Unseen-Photos-8
ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனம் ‘ATMUS Entertainment’ என்ற நிறுவனம். கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், சமீபத்தில் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்து பெருமை பெற்றது. கடந்த மாதம் ஜெயம் ரவி, நயன்தாரா  நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கி வெளியான ‘தனி ஒருவன்’ படத்தை இந்த நிறுவனம்தான் அமெரிக்காவில் ரிலீஸ் செய்தது. மேலும் இளையதளபதி விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘புலி’ படத்தின் அமெரிக்க நாட்டின் ரிலீஸ் உரிமையையும் இதே நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் 50வது திரைப்படம் ‘புலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பல விஜய் படங்களை இந்த நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டிருந்தாலும், 50வது படம் என்பதால் ‘புலி’ படத்தை ஸ்பெஷலாக கருதி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த படத்தை அமெரிக்காவில் அதிகளவில் விளம்பரப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ATMUS Entertainment ரிலீஸ் செய்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் தொடர்ந்து  மூன்றாவது வாரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருப்பதாகவும், விரைவில் $250,000 வசூலை இந்த படம் பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் இந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply