‘புலி’ விஜய்யின் ஒன்பதாவது திரைப்படமா?
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு அனைவரும் எதிர்பார்த்தபடி படத்திற்கு சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். மேலும் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களை தணிக்கை அதிகாரிகள் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குழந்தைகளை கண்டிப்பாக கவரும் என்று அவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுவரை நடித்த விஜய் படங்களிலேயே ‘புலி’ திரைப்படம் மிக அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு தயாரிப்பாளருக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘புலி’ திரைப்படம் தொடர்ந்து ‘U’ சர்டிபிகேட் பெறும் ஒன்பதாவது விஜய் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் வெளியான விஜய் நடித்த கத்தி, ஜில்லா, துப்பாக்கி, தலைவா, நண்பன், வேலாயுதம், காவலன், சுறா ஆகிய படங்கள்’U’ சர்டிபிகேட் பெற்ற படங்கள் ஆகும்
மேலும் விஜய் படங்கள் என்றாலே குழந்தைகள் மட்டும் குடும்பத்துடன் பார்க்கும் படம் என்பது எல்லோர் மனதிலும் பதிந்துள்ளதால் அதற்கும் இந்த ‘U’ சர்டிபிகேட் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.