‘புலி’ படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது ஏன்? புதிய தகவல்கள்
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு மறுக்கப்பட்டற்கான காரணங்கள் அரசியல் ரீதியானது என பலர் கூறிவந்தனர். ஆனால் இந்த படத்திற்கு வரிவிலக்கு ஏன் அளிக்கவில்லை என்ற காரணத்தை இந்த படத்தை அரசு அதிகாரிகள் தற்போது விளக்கியுள்ளனர்.
‘புலி’ படம் வரிவிலக்கு பெற தகுதியில்லை என்பதற்கு இந்த படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என்றும் படத்தின் சண்டைக்காட்சிகளில் அதிகளவு வன்முறை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாடல் காட்சிகளில் நடிகைகளின் ஆடைகள் ஆபாசமாக ஒருசில காட்சிகளாக அமைந்துள்ளதாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் 12 வயது பெண் குழந்தை கழுத்து வெட்டப்படுவது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘புலி’ படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது காட்சி கோரமாக இருப்பதாகவும், மேற்கண்ட காரணங்களால் புலி படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தேவையில்லை என்று தாங்கள் முடிவு எடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.