ஷங்கரை அடுத்து சீனாவிற்கு படையெடுக்கும் விஜய் படக்குழுவினர்.

puliவிஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு வரும் 30ஆம் தேதியுடன் தலக்கோணத்தில் முடிவடைகிறது என்றும் அதன்பின்னர் படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது தலக்கோணத்தில் மிக பிரமாண்டமான செட் ஒன்று ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட்டில் விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்படவுள்ளது. வரும் 30ஆம் தேதியுடன் இந்த பாடலின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும் அதன் பின்னர் மற்றொரு முக்கிய பாடலுக்காக புலி படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனா அல்லது கம்போடியாவுக்கு புலி படக்குழுவினர் செல்லவுள்ளனர். விஜய்யின் அடுத்தபடமான அட்லியும் அந்த படத்தின் படப்பிடிப்பை சீனாவில் நடத்த லொகேஷன் பார்த்துவிட்ட வந்துள்ள நிலையில் தற்போது புலி படக்குழுவினர்களும் சீனா செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply