விஜய்யுடன் ‘புலி’, மகேஷ்பாபுவுடன் ஒரு தெலுங்கு படம், மற்றும் மூன்று இந்தி படங்கள் என படுபயங்கர பிசியில் இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்கவிருக்கின்றார். இந்நிலையில் புலி படப்பிடிப்பின் இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் நேற்று ஸ்ருதிஹாசன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.,
இந்நிலையில் திருப்பதி அருகே வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள இந்த பரபரப்பான நேரத்தில் திருப்பதி செல்ல வேண்டாம் என அவரை விஜய் உள்பட படக்குழுவினர்கள் அனைவரும் எச்சரித்ததாகவும், ஆனால் ஸ்ருதிஹாசன் படக்குழுவினர்களின் எச்சரிக்கையையும் மீறி திருப்பதி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் தமிழ்ப்படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஸ்ருதிஹாசன், தமிழர்களை கொலை செய்த ஒரு மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு எப்படி செல்லலாம்? என ஒருசில அமைப்புகள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் ஸ்ருதிஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.