சீனா-ஜப்பான் நாடுகளிலும் ரிலீஸாகிறது ‘புலி”
விஜய்யின் ‘புலி திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பெருவாரியான நாடுகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘பாகுபலி’ திரைப்படத்தை போல சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் ‘புலி’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் ‘புலி’ ரிலீசாகவுள்ள நிலையில் சீனாவிலும், ஜப்பானிலும் ரிலீசானால் திரையரங்குகளின் எண்ணிக்கை 5000ஐ தாண்டிவிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சீன, ஜப்பானிய மொழிகளின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், அக்டோபர் மாதம் 10ஆம் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்தவுடன் சீனாவிலும், ஜப்பானிலும் ‘புலி’ திரைப்படம் ரிலீஸாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார். விஜய்க்கு இந்த படம் நிச்சயம் ஒரு மைல்கல் படமாகவே இருக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.