விஜய்யின் ‘புலி’ பட நடிகரின் விவாகரத்து அறிவிப்பு?

விஜய்யின் ‘புலி’ பட நடிகரின் விவாகரத்து அறிவிப்பு?
sudeep and priya
கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்,  ‘நான் ஈ’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினியே அழைத்து பாராட்டிய நிலையில், தற்போது விஜய்யின் ‘புலி’ படத்திலும் வெயிட்டான வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் சுதீப் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு நடிகர் சுதீப், ப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு சான்வி என்ற மகள் பிறந்தார். கடந்த 14 வருடங்களாக எவ்வித பிரச்சனையும் இன்றி சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் தற்போது முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் பிரிய முடிவு செய்து விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மகள் சான்வி 11 வயதே என்பதால் தாயிடம் இருக்கவும், இருவருக்கும் சேர்த்து ஜீவனாம்ச தொகையாக ரூ.19 கோடி கொடுக்கவும் சுதீப் ஓப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து ரம்யா, சுதீப் ஆகியோர்களின் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதால் கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.

Leave a Reply